தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விரைவில் அறிவிப்பார் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

Monday, April 27th, 2020

தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வெளியே செல்லும் நடைமுறையானது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் மேல்மாகாணத்துக்கே நடைமுறைப்பப்படுத்த இருந்தது.

இதர மாகாணங்களும் இதனை கடைபிடிப்பது தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன விரைவில் தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிடுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ள தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வெளியே செல்லும் நடைமுறை தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவின்மை காணப்படுதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் விடயத்துக்கு பொறுப்பானவர்கள் இதுதொடர்பாக தெளிவினை ஏற்படுத்தவேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அரசாங்கம் அறிவித்திருக்கும் குறித்த நடைமுறையானது, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளுக்கு மாத்திரமா அல்லது முழு நாட்டிற்குமா என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்படாமையினாலே மக்களுக்கு இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி இரவு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை தளர்த்தப்படுகின்றது.

இருந்தபோதும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை தொடர்ந்து அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: