போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியது.

Thursday, November 30th, 2017

வடக்கு மாகாண போக்குவரத்து சேவையின் பிரதானியாக கேதீஸ்வரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து  போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

வடமாகாணத்தில் அரச பேருந்து பணியாளர்களுக்கும், போக்குவரத்து சபைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர வடக்கு மாகாண போக்குவரத்து சபை ஊழியர்கள் இணங்கியுள்ளனர்.

வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிரதானிகள் இருவரை இடமாற்றம் செய்யக் கோரி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பில் வடக்கு அரச பேருந்து பணியாளர் சங்கங்களுக்கும், போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்காப்பாட்டின் அடிப்படையில் குறித்த பிரதானிகளை இடமாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Related posts:


நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் ...
கிழக்கு மாகாணத்தை ஆட்டம் காணச் செய்தது கொரோனா: ஒரே நாளில் 27 பேருக்கு தொற்றுறுதி – எச்சரிக்கிறார் சு...
யாழ் மாநகர சபையின் பாதீடு உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் - முதல்வர் நம்பிக்கை தெரிவிப...