மின் உற்பத்திக்காக 5,800 மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Monday, March 28th, 2022

எரிபொருள் மூலம் செயற்படும் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு தேவைப்படும் 5,800 மெற்றிக் தொன் எரிபொருளை விநியோகித்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்  குறித்த அமைச்சு மேலும் குறிப்பிடுகையில் -:

கெரவலப்பிட்டி, களனி திஸ்ஸ மற்றும் சுஜிஸ்ட் போன்ற மின் உற்பத்தி நிலையங்களுக்காவே இந்த எரிபொருள் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மசகு எண்ணெய் இல்லாத காரணத்தினால் கடந்த 24 ஆம் திகதி முற்பகல்முதல் கெரவலபப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் செயலிழந்தது.

அந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் தேசிய மின் இணைப்புக்கு 270 மெகாவோட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நீர்மின் உற்பத்தி செய்யப்படும் மலையக நீர்த்தேக்கங்களில் தொடர்ச்சியாக நீரின் மட்டம் குறைந்துவருகிறது. மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 120 அடி உயரத்தில் இருக்க வேண்டிய நீர்மட்டம் தற்போது 54 அடியாக குறைந்துள்ளது. காசல்ரீ நீர்த்தேகத்தில் 155 அடியாக நீர் இருக்கவேண்டிய நீர்மட்டம் 46 அடியாகவே காணப்படுவதாக அந்த நீர்த்தேக்கஙகளோடு சம்பந்தப்பட்ட பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: