இ.போ.ச பேருந்தின் தொழில் நுட்ப கோளாறே விபத்துக்குக காரணம் !

Thursday, October 11th, 2018

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து பிறேக் இன்மை காரணமாக அதன் முன்புறமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியை மோதிய சம்பவம் யாழ் நகரில் முட்டாஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்றது.

இந்த தரமற்ற சரதியின் செயற்பாட்டால் உந்துருளியில் பயணித்த மாணவியையும் அவரைப் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற தந்தையாரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்தே குறித்த இருவரையும் மோதி விபத்துக்குள்ளாக்கியது என்று தெரிவிக்கப்பட்டது. வேம்படி மகளிர் கல்லூரியில் தரம் 10 இல் கற்கும் மாணவியும் அவரது தந்தையுமே இந்த இ.போ.ச பேருந்துச் சாரதியின் கொலை முயற்சியில் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்து; காரைநகர் வழித்தடத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வரும்போது சங்கானையில் வேகத்தடை செயற்படவில்லை. ஸ்ரேறிங் திருப்ப முடியவில்லை என்று சாரதி அலைபேசியில் யாருக்கோ தகவல் வழங்கியுள்ளார் என்று அந்த பேருந்தில் வந்த பயணிகள் அதிர்ச்சித் தகவல்கள் வெளியிட்டள்ளனர்.

ஆனாலும் அதனைத் தொடர்ந்தும் பயணித்த பேருந்து காங்கேசன்துறை வீதியில்  யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை அடைந்து முட்டாஸ் கடைச் சந்தியின் ஊடாக ஸ்ரான்லி வீதியூடாகவே நகரை அடைய வேண்டிய நிலையிலேயே பேருந்தைத் திருப்புவதற்கு சாரதி முயன்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிறேக் இன்மை ஸ்ரேறிங் பழுது போன்றனவே பேருந்தைத் திருப்ப இயலாது போனது என்றும் இ.போ.ச தனக்குரிய வழித்தடப்பாதையில் பயணிக்காது வேறு வழித்தடலில் காங்கேசன்துறை வீதி வழியாக நேரில் பயணிக்கின்ற முற்பட்டது என்றும் அதன்போதே பாடசாலை மாணவியை இ.போ.ச மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டார். அவர் விசாரணையில் உள்ளார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இதனிடையே குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரது தலைக் கவசத்தையும் இ.போ.சபையினர் எடுத்து சென்றுள்ளனர் என நேரில் கண்டவர்கள் தெரிவிப்பதுடன் போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் தரம் குன்றிய நிலையில் போக்குவரத்துக்கு பேருந்தை அனுமதித்த நிர்வாகத்தினர் தம்மீது குற்றம் சாட்டப்படுவதை மறைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் தடையங்களையும் அழிப்பதுடன் பொலிஸாருடனும் பெச்சுக்களை மேற்கொண்ட வருகின்றனர் என செய்திகள் வெளியாகிவருகின்றன.

Related posts: