வெப்பநிலை அதிகரிப்பு: இலங்கைக்கு பாதிப்பு!

Tuesday, October 3rd, 2017

காலநிலை மாற்றத்தின் காரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

உலக வெப்பநிலை 1 பாகை செல்சியஸாக அதிகரிக்கும் போது, உலக நாடுகளின் தனிநபர் உற்பத்தித்திறன் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது

இதன்படி இவ்வாறான அதிகரிப்பின் போது, இலங்கையில் தனிநபர் உற்பத்தியானது 1.39 சதவீதத்தால் குறைவடையும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா, ஃபிலிப்பின்ஸ் போன்ற நாடுகளிலும் இந்த நிலைமையே நிலவுகிறது. எனினும் கனடா, ரஷ்யா, நோர்வே போன்ற நாடுகளின் உற்பத்தித்திறன் உயர்வடையும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது

Related posts:


4 கட்டங்களின் கீழ் 42 நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு...
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க கடமைகளை ப...
சமையல் எரிவாயு - சந்தைக்கு விநியோகிப்பதில் மேலும் தாமதம் -'லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!