இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் – சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக தற்காலிக முடிவு!

Wednesday, October 12th, 2022

இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் கிடையாது என  அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சர்வதேச அபிவிருத்திச் சங்கம் (IDA) வழங்கும் சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக, நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையை தற்காலிகமாக  பொருட்படுத்தாது  செயற்பட வாய்ப்பு வழங்குமாறு உலக வங்கியிடம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை நேற்றுமுன்தினம் (10) அங்கீகாரம் அளித்துள்ளது.

இக்கட்டான நிலையிலுள்ள நாடுகளுக்கு சலுகை அடிப்படையிலான உதவி வழங்கும் உலக வங்கியின் கீழ் இயங்கும் அமைப்பாக சர்வதேச அபிவிருத்திச் சங்கம் செயல்படுகிறது.

இதன்படி, இடைநிலை சலுகைக் கடன் திட்டத்தை (Reverse graduation) மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பின்பற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த முறை “gap” என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்தோனேசியா உட்பட 12 நாடுகள் ஏற்கனவே இந்த முறையைப் பயன்படுத்தி கடன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நுளம்பு பெருகக்கூடிய சூழல்களை உடைய பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுகாதார திணைக்களம் அறிவிப்...
பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை!
இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சவாலானது - ஜ...