நுளம்பு பெருகக்கூடிய சூழல்களை உடைய பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார திணைக்களம் அறிவிப்பு!

Sunday, January 6th, 2019

குடாநாட்டுப் பாடசாலைகளில் நுளம்புகள் பெருகக்கூடிய சூழல்களை வைத்திருக்கும் பாடசாலைகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பாடசாலை வளாகத்தினுள் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை இல்லாமல் வைத்திருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தில் மூன்றாம் தவணை விடுமுறை காலம் முடிவடைந்து அடுத்த முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும் முன்னர் பாடசாலை வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு பிள்ளைகள் மகிழ்ச்சியான சூழலில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சினால் சுற்றறிக்கைகள் வழங்கப்பட்டன.

பாடசாலைகளின் வளாகத்தில் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படுகிறது. இதேவேளை பாடசாலையையும் வளாகத்தினையும் தூய்மைப்படுத்தி நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி டெங்குக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது பாடசாலை அதிபர்களினதும் அதன் நிர்வாகத்தினதும் பொறுப்பாகும்.

Related posts: