விரைவில் கிராம உத்தியோத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் வஜிர அபேவர்த்தன!

Thursday, August 24th, 2017

கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நான்காயிரம் பேருக்கு விரைவில் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் ஆயிரத்து 815 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன. கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நடைமுறை பின்போடப்படவில்லை என்றும்  உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கூறினார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அபேவர்த்தன பதில் அளித்தார்.

Related posts: