வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு ‘ட்ரயல் அட் பார்’ நீதிபதிகள் குழுவினால் இன்று(27) வழங்கப்படவுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை மற்றும் எதிர்த்தரப்பின் தொகுப்புரை என்பன ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. இரு தரப்பு தொகுப்புரைகளும் முன்வைக்கப்பட்ட பின்னர் தீர்ப்பு இம்மாதம்( 27) அறிவிக்கப்படுமென நீதிபதிகள் குழு குறிப்பிட்டிருந்தது.
இதன்படி இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. வித்யா படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முதலாம் மற்றும் 9ஆம் எதிரிகள் தவிர்ந்த ஏனையோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகியிருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம் தனது தொகுப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா எனும் 18 வயது பாடசாலை மாணவி 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி குழுவொன்றினால் கூட்டு பாலியலுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|