வறட்சி நிவாரண செயற்பாடு குறித்து கலந்துரையாடல்!

Wednesday, August 30th, 2017

நாட்டின் பல பிரதேசங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளின் முன்னேற்றம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய அனைத்து துறைசார்ந்த அலுவலர்களின் பங்கேற்புடன் நேற்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்படி விபரங்களை கேட்டறிந்தார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமளிக்கும் செயற்பாடுகள் அமுல்படுத்தப்படும் முறை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்து கொண்டார்.மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை வழங்குவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி, அந்த செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்குவதற்காக 100 தண்ணீர் பவுசர்களை கொள்வனவு செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்கும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக ஜனாதிபதி அவர்களால் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை அலுவலர்களின் பங்களிப்பு தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீர் மற்றும் உணவை வழங்கும் செயற்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

காலநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கடும் வறட்சிக்கு முகம் கொடுப்பதற்காக இப்போதிருந்தே ஆய்வுகளில் ஈடுபட்டு நீண்டகால திட்டத்தின் மூலம் சாவால்களை வெற்றிகொள்வதற்கு நாடு தயாராக வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, மங்கள சமரவீர, பைஸர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts:

வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் இராணுவப் பாதுகாப்புக்குள்?
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முடக்கப்பட...
மின் பாவனை தொடர்பில் அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ப...