சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Thursday, October 19th, 2023

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாகவும் வருவாய் குறித்து விவாதம் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலரின் ஒருபகுதி கிடைக்கப்பெற்று நாட்டின் மீட்பு நடவடிக்கைக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வழங்குனரான சீனாவுடனான விவாதங்கள் தொடர்வதாகவும் ஏனைய தரப்பினருடனும் பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கோவிட் உருமாறிய வைரஸால் ஆரோக்கியமானவர்களுக்கும் மரணம் ஏற்படும் ஆபத்து - இலங்கை மருத்துவ சங்கம் எச்சர...
தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்து வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல - பாதுகாப்பு செயலர்...
அதிகாரப் பகிர்வு குறித்து கவனத்திற்கொள்ளப்படும் - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்..பீரிஸ் தெரிவிப்பு!