வடமாகாணத்தில் 66 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்!
Tuesday, February 20th, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 66 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக்கடிதங்களை மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் வழங்கியுள்ளார். மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில்வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்ட நிலையில் மத்திய அமைச்சினால் 66 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக நியமனம் பெற்றவர்கள் வடக்கின் 5 மாவட்டங்களிலும் வெற்றிடம் உள்ள வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில்உள்ளவர்களுக்கே வடக்கில் ஆயுர்வேத வைத்தியராக வேலை வாய்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியா கொலை: இன்று முக்கிய சாட்சிப்பதிவு!
தாக்குதல்தாரிகளின் தொலைபேசி ஆய்வு அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவிடம்!
இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் - கனேடிய வர்த்தக்கத்துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!
|
|
|


