கொல்வின் சைட்டம் ஆதரவாளர்– குற்றம் சுமத்துகிறார் பேராசிரியர் காலோ பொன்சேகா!

Thursday, October 5th, 2017

இலங்கை வைத்திய சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டமையானது சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியினை சட்டபூர்வமாக்கலின் ஒரு நோக்கம் என முன்னாள் வைத்திய சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே கொல்வின், சைட்டம் ஆதரவாளி என சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் பொன்சேகா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; அவர் சைட்டம் ஆதரவாளி, முன்னர் அவர் சைட்டம் குறித்த பிரச்சினையில் வைத்திய சபையின் ஒருமித்த கருத்துகளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்

Related posts:


உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்து - டெல்டா ப்ளஸ் திரிபடைந்த வைரஸ் குறி...
சீனாவில் 113 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போயிங் ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்து...
ஜனவரியில் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் - சமூக...