ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு – பலர் அதிர்ச்சி!

Thursday, June 27th, 2019

ஜனாதிபதியினால் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி கிடைத்தவுடன் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையின் செப்பல் பிரிவின் C3 அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதிகள் பெரும் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 84 கைதிகள் அண்மையில் புஸ்ஸ மற்றும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு அவசரமாக மாற்றி அனுப்பப்பட்டனர். C3 அறை திடீரென புதுப்பிக்கப்பட்டு, நிற பூச்சு பூசப்பட்டு, தூக்கு மேடை சோதனையிட்டமையினால் கைதிகள் பதற்றமடைந்துள்ளனர்.

இந்த சிறைச்சாலைக்குள் ஏதாவது நடப்பதாக சந்தேகித்த கைதிகளுக்கு நேற்று கிடைத்த செய்தியை நம்ப முடியாமல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மரண தண்டனை கைதிகள் கடும் அதிர்ச்சியடைந்து, மயங்கிவிழுந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பார்த்து சுதந்திரமாக நேரத்தை கழித்த சிறைக்கைதிகள் இந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர். இதுவரையில் C சிறைச்சாலையில் 26 அறைகள் வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே “மரண தண்டனை பேரழிவை தரக்கூடிய அதேவேளை, ஒரு போதும் தீர்வாகாது” என உலகின் பெரும் செல்வந்தனர்களில் ஒருவரான Richard Branson தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, Richard Branson தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: