கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை இன்று நிறைவுக்கு வருகிறது!

Sunday, October 6th, 2019


ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை இடம்பெறவுள்ளது. காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவடைய உள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 21மில்லியன். இவர்களுள்ள 15.6 மில்லியன் வாக்காளர்கள் இந்தத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 5ஆம் திகதி மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள சகல வேட்பாளர்களும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிற்பகல் 2.00 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது தெளிவுபடுத்தப்பட உள்ளது.

வேட்புமனுத் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நாளை காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

இந்த நிகழ்வு அனைத்து தொலைக்காட்சி அலைவரிவைகளிலும் நேரடியாக ஒளிப்பரப்படும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். போட்டியிடும் வேடபாளாகள்; தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை மூன்று மாதங்களுக்குள் பிகடனப்படுத்த வேண்டும். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்டும் வேட்பாளர் பதவி ஏற்பதற்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் திங்கட்கிழமை அன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்திற்குள் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டும். இந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்ட்டுள்ளன.

அத்துடன் அன்று பிற்பகல் 1.00 மணி வரை ராஜகிரிய சரண மாவத்தை மூடப்படுமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts: