யாழ்.மாநகரசபை குத்தகை பெறாது மோசடி செய்கிறது – குற்றம் சாட்டுகிறார் சி.வி.கே.சிவஞானம்!
Thursday, September 21st, 2017
நல்லூர் ஆலய பின் வீதியில் உள்ள பிரபல ஐஸ்கிறீம் கடைக்கான வாகனத் தரிப்பிடத்துக்கு மாநகரசபை குத்தகைப் பணத்தை அறவிடாது பல இலட்சம் ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சிவஞானம் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
குறித்த கடையின் வாகனத் தரிப்பிடத்துக்கு கடைக்கு முன்னால் உள்ள காணி மாநகரசபையால் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதற்காக வரியோ குத்தகைப் பணமோ அறவிடப்படுவதில்லை. இநதச் செயற்பாட்டின் ஊடாக யாழ்ப்பாணம் மாநகரசபை பல இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
பொலிஸாரின் விடுமுறைகள் உடனடி இரத்து!
நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
பிரதமர் தினேஷ் குணவர்தன - எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் சந்திப்பு - இலங்கையின் அறிவுப் பொர...
|
|
|


