நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, August 5th, 2021

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் வடமேல் மாகாணத்தில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:


அமெரிக்காவால் வெளியாக்கப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன ...
இலங்கையின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் : சுகாதாரம், கல்வியமைச்சு பொறுப்புகளும் கைமாறின – புதிய அமை...
ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு – இன்றுமுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் ...