தேர்தல் ஆயத்த பணிக்காக 100 மில்லியனை வழங்கியது திறைசேரி – வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் ஆயத்தங்களை மேற்கொள்வதில் சட்டத் தடைகள் இல்லை என ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, February 12th, 2023

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் மூலமான வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் தங்களுக்கு சட்டத் தடைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எனவே அறிவிக்கப்பட்டபடி திகதியில் தேர்தலை நடத்த ஆணைக்குழுவும் மற்ற தேர்தல் செயலக அதிகாரிகளும் பணியாற்றி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வடக்கில் கொரோனா பரவாதிருக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ம...
கடலட்டை செய்கையாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி – வேலணையில் நடைபெற்ற கூ...
தங்க ஆபரண கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை - வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படும் என நிதி ராஜாங...