கடலட்டை செய்கையாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி – வேலணையில் நடைபெற்ற கூட்டத்தில் அட்டை செய்கையாளர்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021

யாழ் மாவட்டத்தில் கடலட்டை செய்கையை மேலும் அதிகரிப்பதனூடாக அத்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆர்வமாக உள்ள யாழ் மாவட்டத்தை சேர்ந்த மேலும் பலரை உள்ளிர்க்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள அட்டைச் செய்கையாளர்கள் அதற்காக அமைச்சருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தள்ளனர்.

யாழ் மாவட்ட கடலட்டை செய்கையாளர்கள் மாதாந்த செயற்பாட்டு கூட்டம் நேற்றையதினம் வேலணை பிரதேச செயலகத்தில் நீர் வேளாண்மை அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் நிருபராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ் மாவட்ட கடலட்டை பண்ணையாளர்கள் தமது செய்கை செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போது யாழ் மாவட்டத்தில் 100 அங்கீகரிக்கப்பட்ட செய்கையாளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் மேலும் 250 பேர் குறித்த அட்டை செய்கையை மேற்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன்  அவர்களது செய்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கண்காணிப்ப நடவடிக்கைகளை நெக்டா நிறுவனம் துரித கதியில் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் குறித்த அட்டைச் செய்கையை மேற்கொள்வதற்கான அனுமதியை பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்பட்டிருந்த போதிலும் தற்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான அனுமதியை பெற்றுத் தருவதில் இலகுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளதுடன் பல்வேறு சலுகைகளையும் பெற்றுத்தருவதனால் தாம் அத்தொழிலை இலகுவாக முன்னெடுக்க முடிவதாக தெரிவித்திருந்த குறித்த அட் செய்கையாளர்கள்  இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த அட்டடை செயகையாளர்களது மாதாந்த உற்பத்தி, மாதாந்த அறுவடை,  சந்தைப்படுத்தல் போன்றவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலுலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்தரையாடலில் நெக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் நிருபராஜ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா, நெக்டா நிறுவனத்தின் வேலணை பிரதேச திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் அட்டை செய்கையாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: