கொரோனா அச்சம் – மூடப்பட்டது அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையின் துணைத்தூரகம்!

Monday, January 3rd, 2022

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் இலங்கை துணைத் தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

தூதரக அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றுமுதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தூதரகம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக வளாகத்தை சுத்தம் செய்து வருவதால், அலுவலக ஊழியர்கள் வேலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்றும் இதன்காரணமாக 5ஆம் திகதி வரை அலுவலகம் பார்வையாளர்களுக்காக மூடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, அனைத்து பார்வையாளர்களும் ஜனவரி 6ஆம் திகதி முதல் வருகை தரும் முன்னர் தூதரகத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும் - பிரதமர் தெரிவிப்பு!
தமது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை - ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளா...
பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் eRL.2.0 வேலைத்திட்டத்தை...