தொழிலை இழந்து நாடு திரும்புவோருக்கு வட்டியில்ல கடன் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, February 3rd, 2021

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது நாடு திரும்பி தொழில் அற்று உள்ளோருக்கு 1 இலட்சம் ரூபா வரையான உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க 50 ஆயிரம் ரூபா வரையான வட்டியில்லா கடனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக வழங்கவும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலை இழந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு 50,000 ரூபா வரை உதவித்தொகை வழங்கப்படும். எனினும் இதனை 100,000 வரை அதிகரிக்குமாறு நான் கேட்டக்கொண்டேன். மேலும் 50,000 ரூபாவை வட்டியில்லா கடனாக வழங்குமாறு கேட்டேன். தொடர்ந்தும் நாட்டில் இருக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு இந்த உதவியை வழங்குமாறு நான் அதிகாரிகளை பணித்துள்ளேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுச் செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு நாடு திரும்ப தேவையான விமான பயணச் சீட்டை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: