மீண்டும் COPE குழு விசாரணை?

Saturday, January 13th, 2018

COPE குழு எனப்படும் பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் விசாரணைகளை நடத்தவுள்ளது.

இதற்காக மத்திய வங்கியினதும், நிதி அமைச்சினதும் அதிகாரிகளை விரைவில் அழைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிணை முறி மோசடி குறித்த தமது விசாரணை அறிக்கையை கோப் குழு கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்திருந்தது. இந்த அறிக்கையின் பரிந்துரை அமுலாக்கம் குறித்த பின்னூட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே குறித்த அதிகாரிகள் அழைக்கப்படவுள்ளனர்.

பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நிறைவடைந்தப் பின்னர், இந்த நடவடிக்கையை கோப் குழு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: