வறிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றுபவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, March 17th, 2020

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றினார்களா? என சிந்திக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளதாக ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளாரர்.

கொடிகாமம் மிருசுவில் வடக்கு பத்திரகாளி அம்மன் வீதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் வன்னியர் சனசமூகநிலைய தலைவர் யோகரத்தினம் சங்கீரத்தனன் தாலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்வை ஆரம்பித்துவைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் –

எமது நாட்டில் நான்கு வகையான தேர்தல்களில் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றோம். அந்த ஆட்சிக்காலங்கள் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் நீடிக்கின்றன. ஆயினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குரியர்களாக செயற்பட்டார்களா? என்ற கேள்வியை நாங்கள் திருப்பிப் பார்க்கின்றபோது ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தேர்தல் காலங்கள் வரும்போழுதே குக்கிராமங்களுக்குள் வாக்குகளை அபகரிப்பதற்காக ஊடுருவுகின்றார்கள். ஆனால் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா வறிய மக்கள் பின்தங்கிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றி வருகின்றார்.

கடந்த “சப்ரிகம” திட்டத்தினூடாக மக்கள் முன்மொழிவுக்கு அரசாங்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இந்த வீதி திட்டமிட்டு அதிகார துஷ்பிரயோகமூடாக மாற்றம் செய்யப்பட்டது.

இந்த மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சுமார் ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கிடு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே நாம் ஒன்று கூடியிருக்கின்றோம்.

இலங்கை சுதந்திரமடைந்தபின் இதுவரை இந்த வீதி எந்தவொரு அரசியல்வாதியின் கடைக்கண் பார்வைக்கு கூட தெரிந்திருக்கவில்லை. மக்களின் தேவைகளை அறிந்து எமது கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளின் முன்மொழிவில்  அமைச்சர் அவர்கள் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

எனவே தற்போது தேர்தல் காலம் நிலவுகின்றது. மக்கள் பிரதிநிதிகள் தமது கடமைகளை பொறுப்புக்களை செய்தார்களா? என்ற கேள்வி கேட்கும் சந்தர்ப்பமும் உருவாகியுள்ளது.

ஆகவே ஏமாற்றுத் தலைமைகளை நிராகரித்து மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்துவதனூடாக அபிவிருத்திக்காக இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கும் குக்கிராமங்கள் அபிவிருத்தியில் வளர்ச்சியடைவதுடன் அன்றாட தேவைகளும் அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வழிசமைக்கும் என்றார்.

Related posts: