இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்புக்கள் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Friday, August 20th, 2021

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை புதிதாக 3 ஆயிரத்து  806 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 3 ஆயிரத்து 793 பேர், புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன் 13 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டடவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 73ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றினால், மேலும் 2 ஆயிரத்து 186 பேர் குணமடைந்தனர்.

இதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 18 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 47 ஆயிரத்து 661 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரும், கைதடியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும், மானிப்பாயைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும், அளவெட்டியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: