அபாயமற்ற பகுதிகளில் திங்கள்முதல் ஊரடங்கு நடைமுறையில் மாற்றம்!

Saturday, April 18th, 2020

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகவுள்ள இடர் வலயங்களான யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட 6 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல்(20)  ஊரடங்குச் சட்டத்தைப் படிப்படியாக நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்பிரகாரம் குறித்த 19 மாவட்டங்களிலும் முதற்கட்டமாக காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரை ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அத்துடன் 19 மாவட்டங்களிலும் காலையில் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தினாலும் அரசாங்க சேவைக்கு 20 வீதமான உத்தியோகத்தர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளனர்.

மேலும் தனியார் துறையினர் பணி செய்வதற்கான ஆரம்ப நேரமாக காலை-10 மணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்தவாரம்முதல் இலங்கையைப் பகுதியளவில் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: