யாழில் 312 வழக்குகளில் ரூ.141/2 இலட்சம் தண்டம் – பாவனையாளர் அதிகார சபையின்!

Thursday, August 9th, 2018

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையால் 312 வழக்குகளில் 14 இலட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது என்று சபையின் வடக்கு மாகாண உப பொறுப்பதிகாரி சாதிக் தெரிவித்தார்.

இந்த வருடம் கடந்த ஜீலை மாதம் வரை வர்த்தகர்களுக்கு எதிராக 348 வழக்குகள் நீதிவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாவனையாளர் அதிகார சபை இந்த வருடம் நடத்திய சுற்றி வளைப்புகள், முறைப்பாட்டின் அடிப்படையிலான விசாரணைகளில் கடந்த ஜீலை மாதம் வரை 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாவனையாளர் அதிகார சபை இந்த வருடம் நடத்திய சுற்றி வளைப்புகள், முறைப்பாட்டின் அடிப்படையிலான விசாரணைகளில் கடந்த ஜீலை மாதம் வரை 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வியாபாரிகள் மற்றும் சேவை வழங்குநரால் பாவனையாளர்கள் ஏமாற்றப்பட்டாலோ தவறான வழியில் நடத்தப்பட்டாலோ பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும். முறைப்பாட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ளடங்கிய எழுத்து மூல முறைப்பாட்டை சம்பவம் இடம்பெற்ற தினத்திலிருந்து 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில் இந்த விடயம் சம்பந்தமாக பாவனையாளர் தொலைபேசி இலக்கமான 1977 அல்லது 021 221 9001 இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய முடியும்.

இதன்மூலமாக இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதுடன் பண்டங்களை மாற்றவோ, பழுதுபார்க்கவோ, பண்டத்துக்குச் செலுத்திய  பணத்தை மீளப்பெறவோ முடியும். வியாபாரிகளும் விற்பனையின்போது பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் அடிப்படையில் விற்பனைகளை மேற்கொள்வதுடன் விற்பனையின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். சகல மின்சாதனப் பொருள்களுக்கும் குறைந்தது 6 மாத கால உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதேவேளை உத்தரவாதத்தின் போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சகல பொருள்களுக்கும் விலைப்பட்டியல் இடப்பட்டிருக்க வேண்டும். பொருள்களின் உற்பத்தித் திகதி, முடிவுத் திகதி என்பன சரியான முறையில் பொறிக்கப்படுதல் வேண்டும். பதுக்கல், ஏமாற்றுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் வேண்டும். பழுதடைந்த பொருள்களைக் காட்சிப்படுத்தல் விற்பனை செய்தல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: