அத்தியாவசியப் பொருட்களின் விலையை திருத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021

அரிசி, சீனி, பால்மா மற்றும் உள்நாட்டு எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை திருத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

தற்போது, அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பாக பரிசீலனை இடம்பெற்று வருகின்றது.

இருப்பினும் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.ர்.

இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கு டொலர் பற்றாக்குறை மற்றும் ரூபாயின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை சீனி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கிடைக்கப்பெற்ற கையிருப்பு இரண்டரை மாதங்களுக்கு போதுமானது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒரு கிலோ அரிசிக்கு அதிகபட்ச விலையாக 98 ரூபாயை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது போதும், விவசாயிகள் தங்களின் நெல் விளைபொருட்களின் விலையை உயர்த்தக் கோரி தற்போது போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: