தொழில் சந்தைக்கு ஏற்றவகையில் மாணவர்களை பயற்றுவிக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Friday, March 6th, 2020

தொழில் சந்தைக்கு ஏற்றவகையில் பாடசாலை கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து உருவாகும் தொழிற்படையணி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தகவல் தொழினுட்ப பிரிவின் பிரதநிநிகள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பட்டதாரிகள் அனைவருக்கும் அரசாங்கத்தில் தொழில்வாய்ப்புகளை வழங்குவது நாட்டில் பின்பற்றப்படும் துரதிஸ்டமான பாராம்பரியமாகும். ஏனைய நிறுவனங்களில் உள்ள தொழில்வாய்ப்புகளுக்கு அவர்கள் உள்வாங்கப்படாமை பட்டதாரிகரிகளின் தவறு அல்ல.

அதுவே எமது நாட்டில் உள்ள கல்வி முறைமையாகும். தொழில் சந்தைக்கு ஏற்றவகையில் அவர்களை பயிற்றுவிப்பதில்லை. நவீன தொழிநுட்ப திறன்களை கொண்ட மக்கள் பிரிவை உருவாக்க வேண்டும். எமது நாட்டில் முன்பள்ளி முதல் இலவச கல்வி வழங்கப்படுகின்றது. ஆனால் உலக மாற்றத்தை உணர்ந்து நாம் முறையான கல்வியை வழங்கவில்லை.

புதிய தொழினுட்பங்களை எவ்வாறு கையாள்வது என்பதை அறியாவிடின் பட்டங்களை வழங்குவதில் என்ன பயன் என நான் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களையும் அழைத்து கேட்டேன். அதாவது பட்டங்களை வழங்கிய பின்னர் அவர்களுக்கு தொழில்வாய்புகளை தேடுவது கடினம்.

தற்போதைய நிலைமையில் பட்டம் மாத்திரம் முக்கியமானதல்ல மாறாக தகவல் தொழினுட்பத்தையும் பயிற்றுவிக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பான்மையான பட்டங்களை பட்டங்களாகவே கண்டுகொள்வதில்லை. ஒருவரால் செய்ய முடியுமான வேலைகளே மிக மக்கியமானவையாக அமைகின்றன.

கல்வி முறைமையை மாற்ற வேண்டுமாயின் முதலில் நாம் தொழில் சந்தைக்கு ஏற்றவகையில் மாணவர்களை பயற்றுவிக்க வேண்டியது மிக அவசியமானதாகும் என்றார்.

Related posts: