மனித உரிமை மீறப்பட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க தயார் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, February 20th, 2021

கடந்த போர் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்திய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இது குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர தலைமையின் கீழ் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 30/1 யோசனைக்கு அன்றைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்க இணங்கினாலும் இதற்காக இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை எனவும் இதன் காரணமாக இணை அனுசரணை வழங்குவதில் இருந்து தற்போதைய அரசாங்கம் விலகியதாகவும் கூறியுள்ளார்.

எனினும் போர் காலத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிறைவேற்றவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

கோவிட் தொற்று நோயின் சவால்களை எதிர்கொண்டு, சர்வதேசத்துடன் நல்லெண்ணத்தை முன்னெடுத்து நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதுடன் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் உள்நோக்கம் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: