மக்களின் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் – அரச அதிபர் அருமைநாயகம்!

Friday, July 13th, 2018

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் வீட்டுத் தேவைகள் எதிர்காலத்தில் விரைவாகப் பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கண்டாவளைப் பிரதேசத்தில் மாற்றீட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்ட வீட்டை உரிய பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு கலந்துகொண்டு உரையாற்றியபோதே அரச அதிபர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

மாற்றீட்டுத் தொழில் நுட்பத்தில் வீடுகள் அமைக்கும் செயற்பாடுகள் முப்பது வருட காலமாக இருந்தாலும் எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை இது ஒரு புதியதாகவே காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ஏறத்தாழ 889 வீடுகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.

எமது மாவட்டத்தைப் பொறுத்த வரை வீட்டுத் தேவைகள் மிக மிக அதிகம். சுமார் 14 ஆயிரத்து அதிகமான வீடுகள் தேவையாகவுள்ளன. இந்த வீடு மனித வாழ்வுக்கு மிகவும் ஏற்றதாகக் காணப்படுகின்றது.

இதனை அமைப்பதில் பல்வேறு காலதாமதங்கள் காணப்பட்டன. அதாவது இதற்கான உள்ளீடுகளை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் காணப்பட்டன. இப்போது இந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீட்டுத் தேவைகளுடன் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு செயற்படுவதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற வீட்டுத்தேவைகள் எதிர்காலத்தில் விரைவாகப் பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Related posts:


யாழ். பல்கலை கொரோனா சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள்...
புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுப்பது அவசியம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்...
மூன்று காரணங்களினால் பாடசாலை செல்வதற்கு தயங்கும் மாணவர்கள் - பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வ...