யாழ். பல்கலை கொரோனா சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு

Monday, May 4th, 2020

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதணை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 9 பேருக்கு வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்படும் மாதிரிகளும் இங்கு உள்ள ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்

முன்பதாக கொரோனா தொற்று இலங்கையில் பரவியதை அடுத்து அது தொடர்பான பரிசோதனையை யாழ்ப்பாணத்திலும் நடத்தவேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கட்சித் தலைவர்களது கூட்டத்தில் வலியுறுதியியதை அடுத்து யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த இரண்டு பி.சி.ஆர் இயந்திரங்களும் இயக்கப்பட்டு பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் உள்ள இயந்தித்தைக்கொண்டும் இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: