புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுப்பது அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Wednesday, February 17th, 2021

புதிய கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுப்பது அவசியமாகுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித்த அலுத்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாட்டில் தற்போதைய நிலையில் புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் ஏதேனும் அவதானம் மிக்க நிலைமை காணப்படுமாக இருந்தால் அது குறித்து ஆராய்ந்து, அதன் நிலைமைக்குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்தற்ககான யோசனைகளை தொற்றுநோய் தடுப்புபிரிவு பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனை மையமாக கொண்டு அதிகாரிகளுக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியதாக இருக்கும்.

அத்துடன் புதிய கொரோனா தொற்றுகுறித்து அதிக கவனம் செலுத்தப்படாத பட்சத்தில் எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் எனவும் குறித்த சங்கத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

மேலும் தற்போதும் கூட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆகவே அதனுடாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படும். அதேபோன்று புதிய கோரோ வைரஸ்ஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்பும் உள்ளது.

ஆகவே நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்ப்பார்கின்றோம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: