புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எம்.பிக்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.!

Sunday, June 11th, 2023

பெறப்பட்டுள்ள புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறிப்பாக 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிகளவான அதாவது 19  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மிகக் குறைந்த அதாவது 04  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் –  18 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

களுத்துறை மாவட்டத்தில் – 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

கண்டி மாவட்டத்தில் – 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

குருநாகல் மாவட்டத்தில் – 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

இரத்தினபுரி மாவட்டத்தில் – 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

காலி மாவட்டத்தில் – 09 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

மாத்தளை மாவட்டத்தில் – 05 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

நுவரெலியா மாவட்டத்தில் – 08 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

மாத்தரை மாவட்டத்தில் – 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் – 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

திகாமடுல்ல மாவட்டத்தில் – 07  நாடாளுமன்ற உறுப்பினர்களும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் – 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

வன்னி மாவட்டத்தில் – 06 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் – 05 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

புத்தளம்  மாவட்டத்தில் – 08 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

அனுராதபுர மாவட்டத்தில் – 09 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

பொலன்னறுவை மாவட்டத்தில் – 05 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

பதுளை மாவட்டத்தில் – 06 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

மொனராகல மாவட்டத்தில் – 06 நாடாளுமன்ற உறுப்பினர்களும்

கேகாலை மாவட்டத்தில்  – 09 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என  2023ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: