கொழும்பில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றியது எப்படி என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை – இலங்கை சுகாதார துறை அதிகாரிகளை திணற வைக்கும் கொரோனா!

Wednesday, May 6th, 2020

அண்மைய நாட்களில் கொழும்பின் பல இடங்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றியது எப்படி என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா இலங்கைக்கு பரவியது முதல் வெகு விரைவான காலப்பகுதியில், யார் இந்த நோயாளி, எப்படி நோய் தொற்றியது என்பதனை எங்களால் இலகுவாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடன் பழகிய 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் கண்டி பிரதேசத்தில் நேற்று முன்தினம் 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களுக்கு எங்கிருந்து தொற்றியதென கண்டுபிடிப்பதற்கு முதல் முறையாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பில் அதிக தேடுதல்கள் நடைபெறுவதுடன் விரைவில் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: