இலங்கையில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!

Thursday, March 18th, 2021

சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி வரிசைப்படுத்தல் திட்டத்தின்படி, இலங்கையில் 2.65 மில்லியன் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவேக்ஸ் திட்டம், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் பல நன்கொடையாளர்கள் இடையேயான உடன்பாடு என்பன தடுப்பூசியை பெற்றுக்கொள்ள உதவுகிறது எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகளின் முதல் தொகுதி சமீபத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

சுகாதார அமைச்சின் திட்டத்தின்படி, நாட்டில் சுமார் 2.65 மில்லியன் முதியவர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை உட்பட உலகளவில் கொரோனா தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, பல்வேறு இருதரப்பு, பலதரப்பு மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட கூட்டாளர் அரசாங்கங்கள் குறிப்பிடத்தக்க ஆதரவையும் நிதியையும் வழங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: