கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானது யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் – ஒருவர் பலி!

Tuesday, June 16th, 2020

யாழ் மாநகர சபையில் இருந்து மணற்காட்டு பகுதியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த சென்ற தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்றையதினம் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது தீயணைப்பு வாகனம் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி தோட்டத்திற்குள் பாய்ந்துள்ளது.

சம்பவத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மூவர் படுகாயமடைந்த நிலையில் மூவரும் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் தீயணைப்பு படை வீரர் அரிய ரட்ணம் சகாயராஜா வயது 37 என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே யாழ் மாநகரசபைக்கான தீயணைப்பு படை பிரிவு  யாழ் மாநகரசபையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கீழ் திருமதி யோகேஸ்வரி பற்குணரராஜா முதல்வராக இருந்த காலப்பகுதியில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கடும் முயற்சி காரணமாக உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: