பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை – வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவிப்பு!

Monday, January 18th, 2021

பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை நிலையானதாக முன்னெடுப்பதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில் –

கடந்த 6 மாத காலத்திற்கு விஸ்திர விலையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த பொருகளின் விலையை 6 மாதங்களுக்கு நிலையானதாக முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன் புதிதாக வரி வதிக்கப்பட்டால் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் மாற்றம் ஏற்பட்டால் இந்த பொருட்களின் விலையில் மாற்றம் எற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடியான முதலீட்டாளர்களிடம் இருந்து நாம் இது குறித்த ஆலோசனைகளைக் பெறவுள்ளோம். 22 ஆம் திகதி வரைக்கு இது குறித்த ஆலோசனைகளை சமர்ப்பிக்க முடியும்.

சர்வதேச சந்தைக்கு அமைவாக இந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டு அதாவது சத்தோச மற்றும் கூட்டுறவு வர்த்தக செயற்பாடுகள் மூலம் இவற்றை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சத்தோச கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த பொருட்களை கொண்டு வந்து இவற்றின் விலையை குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: