தெங்கு உற்பத்தித்துறையில் பாரிய வீழ்ச்சி! 

Tuesday, March 27th, 2018

நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித் துறையை பாதுகாக்கும் சங்கங்களின்ஒன்றியம் என்பன வலியுறுத்தியுள்ளன.

தென்னந்தோட்டங்களை துண்டாக்கும் செயற்பாட்டுக்கு ஜனாதிபதி உடனடியாக தடை விதிக்க வேண்டும் என அந்த அமைப்புக்கள் வலியுறுத்தின.

எதிர்க்காலத்தில் தெங்கு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும், இதனால் தெங்கு சார் உற்பத்தித்துறைகள் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கக் கூடும் எனவும்தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இதுவரை 21 ஆயிரத்து 616 ஹெக்டேயர் தென்னைப் பயிர்ச் செய்கை அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: