பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

Sunday, June 18th, 2017

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாக இரா.சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்

வடக்கு மாகாணத்தில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளதுமுதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

அதற்கு எதிராக மற்றுமொரு தரப்பினரும் ஆளுநரிடம் கடிதம் கையளித்துள்ளனர் எவ்வாறாயினும் இது பெரிய பிரச்சினை அல்ல, சிறிய விடயமே அனைவரும் இணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

அந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கெடுக்கப்படவில்லைஇந்த நிலையில் இரண்டு தப்பினரும் தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தியவண்ணம் உள்ளனர்

அந்த வகையில் அமைச்சர்கள் தொடர்பில் எதிர்கட்சித்தலைவர் உத்தரவாதம் வழங்கும்பட்சத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள தாம் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்

Related posts: