ஒப்பந்தம் செய்யப்பட்ட சில முக்கிய திட்டங்கள் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டுள்ளது – நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, November 2nd, 2023

2024 ஆம் ஆண்டளவில் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்காக 2019 ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மில்லியன் பெறுமதியான சில முக்கிய திட்டங்கள் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை திட்டம், மக்கள் வசதிக்காக அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஆயிரம் பாலங்கள் திட்டம், அடையாளம் காணப்பட்ட அத்தியாவசிய சாலை கார்பெட்டிங் திட்டம் போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடந்த சில ஆண்டுகளாக இந்த திட்டங்கள் அனைத்தும் கட்டுமானப் பணியின் இடையிலேயே நிறுத்தப்பட்டன.

இத்திட்டங்களுக்காக இரண்டு இலட்சத்து இருபத்து ஓராயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2020ஆம் ஆண்டு நிர்மாணச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதியமைச்சகம் மற்றும் கருவூலத்தின் முடிவுகளின்படி, அனைத்து கட்டுமானங்களையும் தற்காலிகமாக நிறுத்துமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டாலும், இந்த திட்டங்களின் கட்டுமானத்தை மீண்டும் தொடங்கும் திகதி குறித்து எழுத்துப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:

வீட்டு தனிமைப்படுத்தலை கண்காணிக்க விஷேட பொறிமுறை - முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது அதிகாரிகள...
பசறை கோர விபத்தின்போது மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம் - வைத்தியரின் நெகிழ்ச்சியான பதிவு!
மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவா...