தீவுப் பகுதிகளுக்குச் செல்ல மருத்துவர்கள் பின்னடிப்பு – மக்கள் கவலை!

Saturday, March 24th, 2018

வடக்கு மாகாணத்தில் சேவையில் உள்ள மருத்துவர்கள் பலரும் தீவகப்பகுதிகளுக்குச் சேவையாற்றச் செல்ல பின்னடிப்பது காலாகாலமாக நடைபெறுகிறது. மருத்துவர்களுடைய இந்த நிலையால் அங்குள்ள மக்கள் தங்களுடைய நோயைப் போக்குவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மருத்துவமனைகளில் சேவையில் உள்ள மருத்துவர்கள் பலரும் தீவகப் பகுதிகளுக்குச் சேவையாற்றச் செல்லப் பின்னடிப்பது காலாகாலமாக நடைபெறுகிறது. இவற்றையும் தாண்டி சேவைக்குச் செல்லும் மருத்துவர்கள் சில மாதங்களில் இடமாற்றம் கோருவதையும் சேவையில் இருந்து விலகுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

தீவகப் பகுதியில் உள்ள மக்கள் இவ்வாறான காரணங்களால் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். தங்களுடைய நோய்க்கு நகருக்கு வந்தே நிவாரணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். இவற்றை உணர்ந்து மருத்துவர்கள் சேவையாற்றவேண்டியது அவசியமாகும்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மாற்றுவழிகள் ஏற்படுத்தப்பட உரிய தீர்மானம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Related posts: