கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவடைவு – சுகாதார அமைச்சசு தகவல்!

Saturday, July 10th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 557 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் ஆயிரத்து 515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 42 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 71 ஆயிரத்து 483 ஆக அதிரிகத்துள்ளது.

அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும், 27 ஆயிரத்து 57 ஆக காணப்படுகின்றது.

இதேநேரம் நேற்றையதினம் ஆயிரத்து 451 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 41 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சுகாதார திணைக்களம் குகறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் நேற்றையதினம் 43 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இந்த மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார பிரிவினர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: