சுகாதார அமைச்சரிடம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை கையளிப்பு!

Wednesday, July 12th, 2017

இலங்கையில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்திய உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழு ஒன்றினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இதற்கிடையில், டெங்கு நோய் கடுமையாக பரவி வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அரச மற்றும் தனியார் துறை இணைந்து முன்னெடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

சுகாதார அமைச்சு, ஜனாதிபதி செயலகம், முப்படையினர், காவற்துறையினர் உள்ளிட்ட அரச திணைக்களங்களும், தனியார் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள், ஊடகங்கள் என பல்வேறு நிறுவனங்களும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

Related posts:

ரஜனி திரணகமவின் முறிந்த பனைகள் என்னை திரும்பி பார்க்கவைத்தது – பனைசார் அபிவிருத்தி கட்டடத் திறப்பு வ...
அடுத்த 20-30 வருடங்களைப் பற்றி சிந்தித்து இப்போதே செயற்பட வேண்டும் - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்...
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு!