தாதியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் பணிப் புறக்கணிப்புக் கைவிடப்பட்டது!

Saturday, June 25th, 2016

யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத் தாதியர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்து நேற்று வெள்ளிக் கிழமை (24) காலை ஆரம்பித்த பணிப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் நேற்று மாலை கடிதம் மூலம்  சாதகமான பதிலை வழங்கியுள்ள நிலையில் போராடடத்தைக் கைவிட்டு உடனடியாகப் பன்னிக்குத் திரும்புவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் அரச தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடத்தில் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணரொருவருக்கும், பொறுப்புத் தாதிய உத்தியோகத்தரொருவருக்கும் இடையில் உருவான முரண்பாட்டைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தாதிய உத்தியோகத்தர் சத்திரசிகிச்சைக் கூடத்திலிருந்து மாற்றப்பட்டார். இதனையடுத்து மாற்றப்பட்ட தாதிய உத்தியோகத்தரை மீண்டும் சத்திர சிகிச்சைக் கூடத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நேற்றைய தினம் காலை-7 மணி முதல் சத்திர சிகிச்சைக்கூடத் தாதியர்கள் பணிப் புறக் கணிப்பில் ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: