தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் கணக்கெடுக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 23rd, 2020

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அடுத்த கணக்கெடுப்பினை நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்த அமைச்சரவை பத்திரம் பின்வருமாறு –

இலங்கையில் குடிசன மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு 10 வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதுடன் கணக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக, தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அடுத்த கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பின் மூலம் தேசிய கொள்கையை வகுப்பதற்கும் திட்டம் தயாரிப்பதற்கும் தேவையான குடிசன எண்ணிக்கை, அதன் புவியியற் பரம்பல், இன ரீதியிலான பரம்பல் மற்றும் மக்கள் தொகை, புள்ளி விபரங்கள், சமூக பண்புகள் முதலானவற்றைப் போன்று வீடுகள் தொடர்பான தரம் மற்றும் தற்போதைய தரவுகள் மற்றும் தகவல்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் வழங்கப்படும்.

உலகளாவிய ரீதியிலும் நாட்டிற்குள்ளும் நிலவிய ஊழஎனை – 19 தொற்று நிலைமை காரணமாக டு குடிசன மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு 2021டு இல் திட்டமிடும் பணிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், கீழ் குறிப்பிட்ட வகையில் இந்த கணக்கெடுப்பு பணிகளை நடத்துவதற்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: