புரிந்துணர்வை எட்டுவதற்கு ஒருமாதம் கால அவகாசம் – தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021

தோட்டத் தொழிலார்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு, முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு, ஒருமாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், நாடாளுமன்றில் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவருவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், உபகுழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, கூட்டத்தில் பங்கேற்ற பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் வேதன பிரச்சினையைத் தீர்க்க, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: