அரையாண்டு காலத்தில் 1000 முறைப்பாடுகள் !

Monday, July 4th, 2016

இணைய வழியான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட இணைய குற்றங்கள் தொடர்பாக இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 1100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களை முடக்கி ஏனையவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி தவறுதலாக பயன்படுத்துவது தொடர்பாக 70 வீதமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிகாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதம பொறியியலாளர் ரொசான் சந்தரகுப்தா,

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பெண்களின் கணக்குகளே முடக்கப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எனவே இதுதொடர்பில் பெண்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டில் இணைய குற்றங்கள் தொடர்பாக 2800 முறைப்பாடுகளும் 2014 ஆம் ஆண்டு 2500 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன. இதன் பாரதூரதன்மையை அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

குறிப்பாக இளம் யுவதிகளே குறிவைக்கப்படுகின்றனர். சில பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் வெளியாகின்றன. அதாவது உருமாற்றம் செய்யப்பட்டு இவ்வாறான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இதேவேளை குறுஞ்செய்தி மற்றும் ஸ்நெப்செட் தொடர்பில் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் அவதானமாக இருப்பதோடு தொழினுட்பம் தொடர்பான அறிவும் அவசியமாகும் என்றார்

Related posts: