போதைப்பாவனைக்கு எதிராக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – மருந்தகக் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் தலைவர்!

Tuesday, June 26th, 2018

போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறு உள்ளக மருந்தகக் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் தலைவர் கலாநிதி சமன் அபேசிங்க தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக செயலமர்வின் போதே தவிசாளர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது:

போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக பன்னாட்டு தினம் இன்று. இதனை முன்னிட்டு போதைப்பொருள் பாவனை நிவாரண தேசிய வாரம் இன்று முதல் அடுத்த மாதம் ஜீலை 2 ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

பாடசாலைச் சிறார்கள், இளைஞர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டுதல் போன்ற செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். இந்த வாரத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்காக அரச தலைவர் செயலர் மூலம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரச தலைவரின் செயலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கையில் பல்வேறு வகையிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் பரம்பரையை அதிலிருந்து விடுதலை பெறச்செய்து கட்டி எழுப்புவதற்கான தேசிய பொறுப்புக்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சகலருடைய ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றார்.

Related posts:

புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தி இல்லை – ஜனாதிபதி...
மினுவங்கொட கொத்தணியிலிருந்து மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அரச தகவல் திணைக்களம்!
உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்...