ஊர்காவற்துறை – அனலைதீவுக்கு எழுதாரகைப்படகு மீளவரவுள்ளது.

Thursday, October 17th, 2019


ஊர்காவற்துறைக்கும் எழுவைதீவு ஊடாக அனலைதீவுக்கும் இடையில், சுமார் ஒரு வருட காலமாக பயணிகள் சேவையில் ஈடுபடாதிருந்த எழுதாரகைப் படகு, 1.37 மில்லியன் ரூபா  செலவில் சீரமைக்கப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள் பொருளாதார அமைச்சின் நிதிப்படுத்தலில், ஊர்காவற்துறையில் இருந்து எழுவைதீவு மற்றும்  அனலைதீவுக்கான பயணிகள் படகுச் சேவையை வசதிப்படுத்தும் முகமாக 137 மில்லியனில் எழுதாரகைப்; படகு அமைக்கப்பட்டு அங்கு பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தப்படகில் ஒரே தடவையில் 100 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். பின்னர் சுமார் ஒரு வருடமாக அது பயணிகள் சேவையில் ஈடுபடுவதில்லை.

இந்த நிலையில் எழுதாரகை சீரமைக்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சின் செயலர் வே. சிவஞானசோதி, மாவட்ட மேலதிக செயலர்  எஸ்.முரளிதரன் ஊடாக  ஊர்காவற்தறைப்பிரதேச செயலர் திருமதி. மஞ்சுளாதேவி சதீஸனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

Related posts: