இலங்கை அணியினரை இராணுவ முகாமொன்றுக்கு அனுப்ப புதிய இடம்!

Saturday, June 17th, 2017

இலங்கை கிரிக்கட் அணி வீரர்களை இராணுவ முகாமொன்றுக்கு அனுப்பி அவர்களுக்கு உடற்கட்டு தொடர்பான பயிற்சியொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

சில வீரர்களின் உடல்பருமன் அதிகரித்துள்ளதை காணக்கூடியதாய் உள்ளது என அவர் இதன் போது தெரிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இவ்வளவு காலமாக கிரிக்கட்டில் ஒருவரின் காலில் உபாதையாகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக ஒருவர் ஓடுவதற்கு அழைக்கப்படுவார் . தற்போது அதுவும் முடியாது . ஒருவகையில் அதுவும் நல்லதுதான். அவர்களுக்கு ஓட முடியவில்லை என்றால் 50 ஓவர்கள் விளையாட முடியாது என்றால் வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான். நன்கு அவதானித்தால் டீ சேர்ட்டுக்கு மேலாக வயிறு வெளியே தெரிகின்றது.

இலங்கையர்கள் போல மோசமான மனிதர்களை நான் கண்டதில்லை. இலங்கை அணியை பொறுத்த வரையில் சில வீரர்களே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கின்றனர். இதற்காக என்னை சிலர் தூற்றக்கூடும். தற்போது சிலர் கூறியுள்ளனர், பிடியெடுப்புக்கள் தவறவிடப்படுவதால் போட்டி தோல்வியடையாது என. அதனால் பிடியெடுப்புக்களை தவறவிடுகின்றனர். பிடியெடுப்புக்களை தவறவிட்டதால்தான் தோல்வியடைந்துள்ளளோம். நமது அணியின் வீரர்கள் குழந்தைகள் போல்தான் பயிற்சிவிக்கப்படுகின்றனர். அவர்களை இராணுவ முகாம்களுக்கு அனுப்பி ஆறு மாதத்திற்கு பயிற்சிகளை கொடுக்க வேண்டும் . இல்லையென்றால் இந்த விடயம் சரிபட்டு வராது என்றார்.

Related posts: